2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தொடர ஜ.தே.முன்னணி தீர்மானம்

Super User   / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜமீலா நஜிமுதீன்)

 ஜனநாயக தேசிய  முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டமை குறித்து உயர் நீதிமன்றத்தில்  அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்வதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.

ஜ.தே.மு. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இது தொடர்பாக கூறுகையில் தானும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்        குமார மற்றும் மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே ஆகியோர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை குறித்து பொலிஸ் தலைமையத்தில் இன்று இரு முறைப்பாடுகளையும் பதிவு செய்ததாகக் கூறினார்.
 

மேற்படி கைது தொடர்பாக தனது கட்சியின் சட்டத்தரணி அடிப்படை மீறல் மனுவை தாக்கல் செய்வார் எனவும் தெரிவித்தார். ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்கள் மீது காலி பொலிஸார் தாக்குதல் நடத்தியமைக்கு எதிராக  பொலிஸ் தலைமையத்தில் முதலாவது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு எதிராக இரண்டாவது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. Pix: Kithsiri de mel


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .