Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நடைபெற்ற யுத்தமானது ஒரு சிவில் யுத்தமாக வர்ணிக்கப்படுவதை அரசாங்கம் நிராகரித்துள்ளது. மேற்கத்தேய நாடுகள் தங்களது வசதிக்காக இதனை ஒரு சிவில் யுத்தமாக வர்ணித்து வருவதாகவும் அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதேவேளை, புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கம் பல்வேறு மனித உரிமை மீறல்களையும் யுத்தக் குற்றச்சாட்டுக்களையும் புரிந்துள்ளதாக கூறப்படுவதானது வன்மப்போக்காகும் என்று அமெரிக்காவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் எனும் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காகவே இலங்கை இராணுவத்தினர் நீண்டகால யுத்தமொன்றை நடத்தினர். இது முற்றிலும் பயங்கரவாதத்துக்கு எதிரானதாகும். இதனை சிவில் யுத்தம் என்று வர்ணிப்பது தவறாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டினை பிளவுபடுத்தும் நோக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இந்த பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறிய அவர், இதன்போது புலிகளினால் தமிழர்கள் பலர் கொன்று குவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுமேயானால், விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து எவ்வாறு 3 இலட்சம் பொதுமக்கள் காப்பாற்றப்பட்டனர் என்றும் கேள்வி எழுப்பிய அவர், இலங்கை பாதுகாப்பு தரப்பினர் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பயிற்சிகளையும் பெற்றவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உட்பட அனைத்து இன மக்களையும் பாதுகாத்து, அவர்களுக்கான சிறந்த வாழ்க்கை முறையினை ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் தற்போது முழுமையான கவனம் செலுத்தி வருகின்றது என உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
6 hours ago