2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

மேர்வின் சில்வாவிடம் ஒழுக்காற்றுக் குழு விசாரணை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா,  ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஒழுக்காற்று குழு முன்னிலையில் இன்று காலை சாட்சியமளித்தார்.
 
இக்குழு ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் கூடியது.

கட்சியின் விதிமுறைகளை மீறி முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா செயற்பட்டாரா என்பது தொடர்பாக விசாரித்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்குழு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

மூவரை உள்ளடக்கிய இக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஜெயந்த வீரசேகரவும் செயலாளராக ஓய்வுபெற்ற அரச சேவையாளர் மஹிந்த சமரசேகர செயலாளராகவும் உள்ளனர். மேல்நீதிமன்ற சட்டத்தரணி என்.எம்.சஹீட்டும் இக்குழுவில் அங்கம் வகிக்கிறார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--