2025 ஜூலை 12, சனிக்கிழமை

துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதி பலி

Super User   / 2010 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

கண்டி போகம்பரைச் சிறைச்சாலையில் இன்று காலை சிறைக்காவலர்களால் கைதியொருவர்  சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயற்சித்தபோது காவலர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதால் கைதியொருவர் பலியானதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி. சில்வா டெய்லி மிரர் இணையத் தளத்திற்குத் தெரிவித்தார்.

கைதிகள் சிறைச்சாலையின் இரண்டாவது மாடியின் கூரை மீதேறி ,மதிலைக் கடந்து செல்வதற்கு முயற்சித்ததாகவும் அவர் கூறினார்.

சிறைக்காவலர்களின் எச்சரிக்கையையும் மீறி கைதிகள் தப்பிச்செல்ல  முயற்சித்தபோது இத்துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஒருவரே பலியாகியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .