2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

புலிகளால் கைப்பற்றப்பட்ட காணிகளை இராணுவம் மீள ஒப்படைக்கவில்லை எனப் புகார்

Super User   / 2010 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடக்கில் புலிகளால் தம்மிடமிருந்து கைப்பற்றப்பட்ட காணிகளை இராணும் மீள ஒப்படைக்கவில்லை என அண்மையில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

எவ்வாறாயினும், இந்த காணி உரிமையாளர்கள் விடுதலை புலிகளுக்கு காணிகளை விற்றுப் பெற்ற பணத்தை கொண்டு தமது பிள்ளைகளை வெளிநாட்டுகளுக்கு அனுப்புவதற்கு பயன்படுத்தியதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலங்களில் சில விடுதலை புலிகளின் நிர்வாக அலுவலகம் மற்றும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையகமாகவும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.   

இந்த காணிகள் தொடர்பாக கிளிநொச்சி அரச அதிபர் மற்றும் இராணுவத்திற்கும் இடையில் அடுத்த வாரம் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--