2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ஜோர்தானிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அறிக்கைக்காக காத்திருப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜோர்தானில் பணிப்பெண்களாக தொழில்புரியும் இலங்கையர்களின் சம்பளம் தொடர்பாக இலங்கைத் தூதரகத்தின் அறிக்கைக்காக தான் காத்திருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியம் தெரிவித்துள்ளது.

200 அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாக சம்பளம் வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டதால் ஜோர்தானுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை இலங்கை இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு முகவரகங்கள் சம்பளத்தை அதிகரிப்பதற்கு இணங்கினால் இத்தடை நீக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க டெய்லி மிரர் இணையத்தளத்துக்குத் தெரிவித்துள்ளார்.

சம்பள அதிகரிப்புத் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு ஜோர்டானிலுள்ள இலங்கைத் தூதரகமே பொறுப்பு என்பதால் அதன் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என கிங்ஸிலி ரணவக்க மேலும் கூறியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .