Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.செல்வநாயகம்)
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன குடாஹெட்டியை பொலிஸ் மா அதிபரின் சிபார்சின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைத்தமை தொடர்பில் சந்தன குடாஹெட்டி தாக்கல் செய்த மனு மீதான வழக்கு விசாரனை இன்று திங்கட்கிழமை இடம்பெற்றபோது உயர் நீதிமன்றம் அவர் மீதான கட்டாய விடுமுறை விதிக்கப்பட்டமையை தற்காலிகமாக நிறுத்திவைத்ததுடன் விசாரணையை டிசெம்பர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
பொலிஸ்மா அதிபர் இது தொடர்பான தகவல்களை பாதுகாப்பு அமைச்சரின் செயலாளருக்கு வழங்கியிருக்கவில்லை என நீதிமன்றத்தினால் குறித்துரைக்கப்பட்டது. குடாஹெட்டியின் மனு மீதான ஆட்சேபனையை தெரிவிப்பதற்கு ஆகஸ்ட் 23 இறுதி திகதியாகும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மருதானையில் அமைந்த ஒரு அச்சகம் மீது பொலிஸார் மேற்கொண்ட திடீர் பாய்ச்சலும் சோதனையும்தான் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது.
ஜனாதிபதி மீது அவதூறும் கூறும் சுவரொட்டிகள் அடிக்கப்படுவதாக தனக்கு கிடைத்த தகவலின் பேரில் மருதானையில் உள்ள ஒரு அச்சகத்தின் மீது பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டரான கெமுனு பரிசோதனை நடத்தினார். ஆனால் அங்கு அவ்வாறான சுவரொட்டி ஏதும் இருக்கவில்லை.
இந்த திடீர் சோதனைப் பற்றி தனக்கு அறிவிக்காமலே பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் இதை மேற்கொண்டார் எனவும் தான் இதைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டரை அந்த அச்சகத்தை விட்டு வெளியேறுமாறு கூறியதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் குடாஹெட்டி நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
அச்சகத்தின் மீது அவதூறு கூறி வீணாக மேற்கொள்ளப்பட்ட திடீர்ப்பாய்ச்சல் அரசாங்கத்துக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கியது. இது பற்றி ஊடகங்கள் கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து சந்தன குடாஹெட்டி பதவி மாற்றம் செய்யப்பட்டு இடம்மாற்றம் செய்யப்பட்டார்.
மார்ச் 09 ஆம் திகதி இவர் பொலிஸ் மா அதிபரின் சிபாரிசின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார். இதற்கு எதிராக சந்தன குடாஹெட்டி தாக்கல் செய்த அடிப்படை மனு உயர் நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது.
14 minute ago
18 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
38 minute ago
2 hours ago