Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சந்துன் ஏ. ஜயசேகர)
ரயில்வே பொது முகாமையாளர் ஆர்.பி.விஜேசேகரவுக்கு எதிராக என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து அமைச்சரவை இன்று புதன்கிழமை தீர்மானிக்கவுள்ளது.
சுமார் 10 மில்லியன் ரூபா அரசாங்க நிதியை முறைகேடாக கையாண்டதாக இலஞ்ச, ஊழல் தொடர்பான ஆணைக்குழுவினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆர்.பி. விஜேசேகர, கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் கடந்த 5 ஆம் திகதி ஆஜர் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அடுத்த விசாரணை நவம்பர் 23 ஆம்திகதி நடைபெறவுள்ளது.
லஞ்சம், ஊழல் தொடர்பான ஆணைக்குழுவானது ரயில்வே திணைக்களத்தின் உரிமை மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பி.பி. விஜேசேகர மீது நடவடிக்கை மேற்கொள்ளத் தொடங்கியது.
புகையிரத திணைக்கள ஊழியர்களின் அமைப்பு இவர் மீது தாம் 7 புகார் செய்துள்ளதாக கூறியுள்ளது.
எனினும், ரயில்வே பொதுமுகாமையாளர் அமைச்சரவையினால் நியமிக்கப்படுவதால் அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு தனக்கோ தனது அமைச்சு செயலாளருக்கோ அதிகாரம் இல்லையென போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தான் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் இவர் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அமைச்சரவை தீர்மானிக்கும் எனவும் அமைச்சர் குமார் வெல்கம கூறிள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago