Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜமிலா நஜ்முதீன்)
ஆபாசப் படங்களைத் தடுக்கும் மற்றொரு நடவடிக்கையாக ஆபாசக் காட்சிகள் கொண்ட சிங்களத் திரைப்படங்களைத் தடை செய்வதற்கு நீதிமன்ற உதவியை பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு நாடியுள்ளது.
107 சிங்களத் திரைப்படங்களைத் தடை செய்வதற்காக பத்தரமுல்லையிலள்ள சிறுவர் நீதிமன்றத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு இன்று காலை அறிக்கையொன்றை சமர்ப்பித்துதாக பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு வட்டாரங்கள் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தன.
'இத்திரைப்படங்களில் வயதுவந்தோருக்கான காட்சிகள் அதிகமாக இருக்கின்றன. அதனால் அவற்றை தடை செய்வதற்கு நாம் நீதிமன்ற உத்தரவை எதிர்பார்க்கிறோம். 107 திரைப்படங்கள் குறித்த அறிக்கையை நாம் இன்று நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்தோம்' என அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
'வயதுவந்தோருக்கு மட்டும்' என முத்திரையிடப்பட்ட திரைப்படங்களை தடை செய்வதற்கு கடந்த வருடம் அரசாங்கம் தீர்மானித்தது. அத்துடன், பாலியல் காட்சிகள் கொண்ட நிகழ்ச்சிகள், பிரசுரங்கள் என்பன தொடர்பான விதிகளும் கடுமையாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அத்துடன், தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுவதற்கு பொது அவைக்காற்றுகை சபையில் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை கட்டாயமாக்கப்படும் எனவும் அரசாங்கம் கூறியிருந்தது. சமூகத்திற்கு குறிப்பாக ஒவ்வாத விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதை தடுப்பதற்காக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அரசாங்கம் தெரிவித்தது.
செல்லிடத் தொலைபேசிகளில் ஆபாசப்படங்களை தடுப்பதற்காக ஆபாச இணையத்தளங்களின் பட்டியலை பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு ஏற்கெனவே நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (DM)
28 minute ago
35 minute ago
47 minute ago
57 minute ago
Ramesh Wednesday, 25 August 2010 08:30 PM
'வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்று ஒரு திரைப்படத்திற்கு முத்திரையிடப்பட்டால், பிறகு ஏன் அனைவருக்கும் தடை?
Reply : 0 0
Pottuvilan Wednesday, 25 August 2010 09:46 PM
பாராட்டப்படவேண்டிய முயற்சி சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .
Reply : 0 0
ahaneez Thursday, 26 August 2010 06:14 PM
உண்மை, நல்ல விடயம் வரவேற்க வேண்டும்.
Reply : 0 0
riza Thursday, 26 August 2010 08:52 PM
இவ்வாறான நல்ல விடயங்களை மேற்கொண்டால் எதிர்காலத்தில் எமது நாட்டில் நல்ல பிரஜைகளை உருவாக்க முடிவதுடன் சிறந்த கல்விமான்களை உருவாக்க முடியும். நாட்டில் விபாசாரம் போன்ற தீய செயல்கள் குறைந்து நாடு வளம் பெரும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
35 minute ago
47 minute ago
57 minute ago