2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஐ.தே.க.வின் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

ஐக்கிய தேசிய கட்சியினால் நாடு முழுவதிலுமான டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு நாடு முழுவதிலும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இதன் பிரகாரம் ஐந்து இலட்சம் துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஒரு இலட்சம் வரையானவை தமிழ் மொழியில் அச்சிடப்பட்டுள்ளன.  இன்று காலை எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கான துண்டுப் பிரசுரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அத்துடன் அனைத்து பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.தே.க பிரதிநிதிகளிடமும் இந்த துண்டுப் பிரசுரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Kithsiri De Mel


  Comments - 0

  • Ramesh Wednesday, 25 August 2010 09:49 PM

    நுளம்பு ஒழிப்பில் யானைகள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X