2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

ஈரானுக்கு முழு ஆதரவை வெளிப்படுத்தினார் புடின்

Freelancer   / 2026 ஏப்ரல் 28 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானுக்கு தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருக்கு இடையில் மொஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பின்போது, இந்த ஆதரவு வெளியிடப்பட்டுள்ளது.

முடிந்தவரை விரைவாக அமைதியை நிலைநாட்ட, அனைத்தையும் தாம் மேற்கொள்ளவுள்ளதாக புடின் கூறியுள்ளார்.

ஈரானிய மக்கள் தங்கள் இறையாண்மைக்காக  வீரத்துடனும் துணிச்சலுடனும் போராடி வருவதாகக் கூறிய அவர் அதனைப் பாராட்டியுள்ளார்.

ஈரானிய மக்கள் ஒரு புதிய தலைவரின் கீழ் இந்த இக்கட்டான சோதனைக் காலத்தை வெற்றிகரமாகக் கடந்து அமைதி காணும் என்று தான் நம்புவதாகவும்; புடின்; குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறத்தில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அரக்ச்சி ரஷ்யாவின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

அமெரிக்காவின் தாக்குதல்களையும் ஆக்கிரமிப்பையும் ஈரானிய மக்கள் தங்கள் மன உறுதியால் எதிர்கொண்டுள்ளதை உலகம் கண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன் அமெரிக்காவுக்கு எதிரான ஈரானின் போராட்டம் தொடரும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் ரஷ்யா இடையேயான உறவு ஒரு  மூலோபாயக் கூட்டாண்மை என்றும், இது வருங்காலத்தில் மேலும் வலுவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .