Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு தொடர்பிலான நேரடிப் பேச்சுவார்த்தையொன்று இன்று மாலை கண்டியில் இடம்பெற்றது.
இப்பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் உயர் பீட கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பில்லாமல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முன்மொழிவையும் தனது கட்சி எதிர்க்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவது உங்களது சமூகத்திற்கு பாதிப்பு விளைவிக்குமா என வினவியதற்கு அது தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை என அவர் கூறினார்.
நல்லாட்சி ஏற்படுத்துவது தொடர்பில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஜனாதிபதியை மீண்டும் சந்தித்தமைக்கான காரணம் என்ன என வினவியதற்கு, மீண்டும் சந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டதனால் சந்தித்ததாகவும், முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனேயே ஜனாதிபதி சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தான் எப்போழுதும் உண்மைக்கு புறம்பில்லாத வகையில் எதிர்க் கட்சிகளுடன் செயற்பாடுவதாகவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago