Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யொஹான் பெரேரா)
சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பியுடன் இணைந்து பாரிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
சிறிய கட்சிகளுடனான கூட்டணி போதுமானதல்ல எனவும் பாரிய கூட்டணி அமைக்கப்பட வேண்டுமெனவும் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட சில கட்சிகள் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்ததையடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜே.வி.பி.யுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான பொறுப்பு ஐ.தே.க.வின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஜ.தே.முன்னணி தலைவர் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு ஐ.தே.க. பிரதித்தலைவர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்க்கட்சிக் கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது அரசாங்கத்துடன் ஐ.தே.க. பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என இது தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகளின் தலைவர்கள் சிலர், ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளனர். ஐ.தே.க. அங்கத்தவர்கள் சிலரும் அதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, ஜனநாயக மக்கள் முன்னணியின்தலைவர் மனோ கணேசன், பொதுச்செயலாளர் ந.குமரகுருபரன், ஸ்ரீல.மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் ஐ.தே.க தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, மங்கள சமரவீர எம்.பி. ஆகியோர் இக்கூட்டத்தில் பங்குபற்றினர். எதிர்வரும் 31 ஆம் திகதி இவர்கள் மீண்டும் சந்தித்துப் பேசத் தீர்மானித்துள்ளனர்.
Ramesh Thursday, 26 August 2010 05:27 PM
ஜனாதிபதித் தேர்தல்கால கூட்டணிக்கு மீண்டும் முயற்சி. அப்படித்தானே?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
4 hours ago