Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தை நோக்கி ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
எத்துல் கோட்டேயில் இக்குழுவினர் தடுக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவிற்கு திரும்பிச் சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜீத் பிரேமதாஸ, தயாசிறி ஜயசேகர, ரோஸி சேனாநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க, மங்கள சமரவீர மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் பங்குபற்றினர். (DM)
3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025