Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 12 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் உயர் மட்ட பாதுகாப்புக் குழுவொன்று சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்தும் நோக்குடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளுக்காக இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இக்குழுவில் சிரேஷ்ட படை அதிகாரிகள் பலர் இடம்பெற்றுள்ளனர்.
இராணுவத்தின் பிரதம படை அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்க இக்குழுவில் இடம்பெற்றுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. அதேவேளை, விமானப்படையின் பிரதம படை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பி.பீ. பிரேமச்சந்திரவும் சீனாவுக்குச் சென்றுள்ளதாக விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
01 Jul 2025