Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 13 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாரூக் தாஜுதீன்)
பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மூவரை கொழும்பு பிரதம நீதவான் இன்று, 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தினுள் பிரவேசிக்க முற்பட்ட ஐந்து பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கொழும்பு பல்கலைக்கழக மூன்று மாணவர்களை கறுவாத்தோட்ட பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் பாதகை ஒன்றை காட்சிப்படுத்த இடம் தேடிய போது பொலிஸார் தெரிவித்தனர்.
அச்சந்தர்ப்பத்தில் தீடிரென்று அங்கு வந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்களை தாக்க ஆரம்பித்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்களை உடைந்த போத்தல்களால் தாக்கிய போது அங்கு தலையீட்ட பொலிஸார் மூன்று மாணவர்களை கைது செய்ததாக கறுவாத்தோட்ட பொலிஸ் நிலைய சார்ஜன்ட் அனுர விஜயரட்ன தெரிவித்தார்.
காயங்களுக்குள்ளான மாணவர்கள் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இது தொடர்பில் இன்னும் சிலரை கைது செய்ய வேண்டியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவிய முரண்பாட்டின் விளைவாகவே இச்சம்பவம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மூன்று கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களை நீதவான் பல தடவை கண்டித்துடன் இவ்வாறு மீண்டும் செய்தால் விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்கப்படுவர் எனவும் நீதவான் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
50 minute ago
02 Jul 2025