Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தின் உதவியுடன் தான் தொழில் புரிவதாக வெளிவரும் தகவல்களில் எந்தவித உண்மையுமில்லை எனவும் அரசாங்கத்திற்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளரான தயா மாஸ்டர் தமிழ்மிரருக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் உதவியுடன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தயா மாஸ்டர் பணிபுரிந்து வருவதாக வெளியாகிய செய்தி தொடர்பாக தயா மாஸ்டரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
'நீதிமன்றத்தினால் நான் பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பரின் தொலைக்காட்சியில் பணிபுரியும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஊடகத்துறை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் நான் அந்தத் துறையினை தேர்ந்தெடுத்தேன்.
இதில் அரசாங்கத்தின் எந்த தலையீடும் இருக்கவில்லை. சாதாரணமான நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியே நான் இந்த வேலையினைப் பெற்றுக்கொண்டேன். அரசாங்கத்தின் தலையீடு என்மீது இருப்பதாக வெளிவரும் தகவல்களை நான் முழுமையாக மறுக்கின்றேன்' என்று தயா மாஸ்டர் மேலும் குறிப்பிட்டார்.
தன்னைப்போல் மிகவும் திறமையானவர்கள் பலர், முன்னாள் புலி உறுப்பினர்கள் என்ற ஒரே காரணத்துக்காக தொழில் வாய்ப்பின்றி இருக்கிறார்கள். அவர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் தொழில்வாய்ப்பினை வழங்க நிறுவனங்கள் முன்வரவேண்டும் எனவும் தயா மாஸ்டர் தொழில்சார் நிறுவனங்களை கேட்டுக்கொண்டார்.
தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தயா மாஸ்டர் வழங்கிய செவ்வியின் முழுவிபரம் ஒலிப்பதிவில்...
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
26 minute ago