Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தம் அகோரமாக இடம்பெற்ற இறுதிச் சமயத்தில் படகு மூலம் தப்பிச் செல்லும் போது கடற் படையினரால் கைது செய்யப்பட்ட கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கைது செய்யப்பட்ட தனது மனைவியையும் மகனையும் விடுதலை செய்வதற்கு உதவுமாறு முன்னாள் கடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் நேரடியாக சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ். பணிமனையில் சந்தித்த சூசையின் சகோதரரான பொலிகண்டி கிழக்கைச் சேர்ந்த சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம் தவராசாவே இக்கோரிக்கையை முன்வைத்தார்.
இது குறித்து அமைச்சரிடம் மேலதிக தகவல்களைத் தெரிவித்த அவர், வன்னியில் யுத்தம் அகோரமாக இடம்பெற்ற போது தனது மனைவி சந்திராதேவி (வயது60) மகன் சிலம்பரசன் (வயது16) மற்றும் தனது சகோதரன் சிவநேசனின் (சூசை) மனைவி சத்தியதேவி (வயது46) மகள் சிந்து (வயது18) மகன் மணியரசன் (வயது17) ஆகியோரை 2009.05.14 அன்று படகு மூலம் அனுப்பி வைத்துவிட்டு தான் இராணுவத்திடம் சரணடைந்ததாக தெரிவித்தார். இராணுவத்தினர்தன்னை கௌரவமாக நடத்தி செட்டிகுளம் நிவாரணக் கிராமத்தில் தங்கவைத்த பின் மீள்குடியேற்ற நடவடிக்கையின் போது யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
படகு மூலம் சென்ற தனதும் சூசையினதும் குடும்பத்தவர்கள் கடற் படையினரால் கைது செய்யப்பட்டு திருகோணமலை கடற் படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் ஐவரையும் விடுவிப்பதற்கு உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் 61 வயதாகும் தன்னைக் கவனிப்பதற்கு உறவினர் எவரும் இல்லையெனவும் தனது மகனுக்கு சிறந்த கல்வியை பெற்றுக் கொடுத்து நல்ல நிலைக்கு கொண்டுவர தான் விருப்பமாக உள்ளதாகவும் அமைச்சரிடம் தெரிவித்தார்.
சிவலிங்கத்தின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்திய அமைச்சH டக்ளஸ் தேவானந்தா இலங்கை அரசின் சட்ட வரையறைக்குட்பட்டு தன்னால் இயலுமான உதவியை வழங்குவதாக அவருக்கு உறுதியளித்தார்.
ஏற்கனவே கடந்த 10ஆம் திகதி ஈ.பி.டி.பியின் வடமராட்சி அமைப்பாளர் ஐ.சிறிர ங்கேஸ்வரனை வடமராட்சி தலைமைப் பணிமனையில் சந்தித்த சூசையின் சகோதரர் சிவலிங்கம் மேற்படி கோரிக்கையினை முன்வைத்த போதோ ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் வந்தவுடன் அவரிடம் இக்கோரிக்கை தொடர்பாக தெரிவித்து அமைச்சரை நேரடியாகச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாக வடமராட்சி ஈ.பி.டி.பி அமைப்பாளர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
50 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
57 minute ago