2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்யத் திட்டம்

Super User   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இந்திக  ஸ்ரீ அரவிந்த)

எதிர்வரும் நவம்பர் மாதம் நாட்டில் கோழி முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால் ஒருநாள் வயதான கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்வதற்கு விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் நிமல் சந்திரிசிறி டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக, முன்னர் இத்தகைய தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஆனால், நவம்பர் மாதம் பெருநாள் காலம் ஆகையால் முட்டை பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களின் இக்காலப்பகுதியில் அதிகமாக தயாரிக்கப்படும் என்பதைக் கருத்pற்கொண்டு தயக்கத்துடன் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பறவைக் காய்ச்சல் இல்லாத நாடுகளென உலக சுகாதார நிறுவனத்தினால் குறிப்பிடப்பட்ட நாடுகளிலிருந்தே இக்கோழிக்குஞ்சுள் இறக்குமதி செய்யப்படும் என டாக்டர் சந்திரசிறி தெரிவித்தார்.

இத்தீர்மானத்தின்படி கோழிப்பண்ணையாளர்களோ அல்லது ஏதேனும் குழுவினர் பிரான்ஸ், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து  2 இலட்சம் வரையான கோழிக் குஞ்சுகளை இறக்குமதி செய்யலாம் எனவும் அவர் கூறினார்.
இந்தியா, பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறினார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--