A.P.Mathan / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

(றிபாயா நூர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி வேலைகளை மேற் கொண்டுவரும் சீன கம்பனியின் ஊழியர்கள், நேற்று சனிக்கிழமை (18.09.2010) தொடக்கம் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கின்றனர்.
கரடியனாற்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த சீன நாட்டை சேர்ந்த இருவருக்கும் மற்றும் அவர்களின் சாரதிகள் உட்பட உயிரிழந்த தொழிலாளிகளுக்காகவும் இத்துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
துக்கம் அனுஷ்டிப்பதைத் தொடர்ந்து மட்டக்களப்பிலுள்ள சீன கம்பனியின் வேலைத்தளம் மூடப்பட்டிருப்பதுடன் நிறுவன வாசலிலும் வாகனங்களிலும் வெள்ளைக்கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. அத்தோடு அங்குள்ள சீன நாட்டு அதிகாரிகள் தமது கைகளில் கறுப்பு பட்டியையும் அணிந்துள்ளனர்.


38 minute ago
41 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
41 minute ago
52 minute ago