Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு அக்கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல் காதர், நிமல் விஜேசிங்க, மனுஷ நாணயக்கார மற்றும் உபேக்ஷா ஸ்வர்ணமாலி ஆகியோரின் கட்சி உறுப்புரிமையினை நீக்குவதற்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் ஏர்ல் குணசேகர ஆகியோர் நீதிமன்ற உத்தரவொன்றைப் பெற்றுள்ளதால் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட ஆலோசனை பெறுவதற்கு இந்த கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் எம்.பி.க்களான பி.திகாம்பரம் மற்றும் ஸ்ரீ ரங்கா ஆகிய இருவரும் ஐ.தே.க.வுடன் அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதற்கும் தீர்மானித்துள்ளதாகவும் பிரபா கணேஷன் தொடர்பில் அவரது கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி எடுக்கும் தீர்மானத்துக்கு அமையவே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஐ.தே.க செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
7 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
24 Oct 2025