2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

வெற்றி எவ்.எம் தாக்குதலாளிகள் அடையாளம் காட்டப்படவில்லை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 20 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்மால் சூரியகொட)

வெற்றி எவ்.எம், சியத்த எவ்.எம் நிறுவனம் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் எவரும் சம்பவத்தை நேரில் கண்டவர்களால் அடையாளம் காட்டப்படவில்லை என கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திடம், கொம்பனித்தெரு பொலிஸார் தெரிவித்தனர்.

வெற்றி எவ்.எம் மீதான தாக்குதல்   சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தபோதே, பொலிஸார் இதனைக் கூறினர்.

வெற்றி எவ்.எம் நிலையத் தாக்குதலின்போது, சேதமடைந்த உபகரணங்கள் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.

இந்நிலையில், வெற்றி எப்.எம் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்யுமாறும், எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும்  பொலிஸாரிடம், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரட்ன உத்தரவிட்டார்.(DM)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--