2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

சக்தி மூலங்களில் ஒன்றாக அணுசக்தியை சேர்ப்பது குறித்து இலங்கை ஆராய்வு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் சக்தி வழங்கும் மூலங்களில் ஒன்றாக அணு சக்தியையும் சேர்த்துக்கொள்ளும் சாத்தியம் பற்றி ஆராய்வதென இலங்கை தீர்மானித்துள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

வியன்னாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பின் 54ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர், அணு சக்தி துறைக்கு தேவையான மனித வளங்களை விருத்தி செய்வதற்கு இலங்கை அணு சக்தி அதிகார சபை ஆரம்பித்து விட்டது என்றும் குறிப்பிட்டார்.

முன்னர் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் கீழிருந்த அணு சக்தி அதிகார சபையானது, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக பாட்டலி சம்பிக்க ரணவக்க நியமனம் பெற்றதன் பின்னர் அவரது அமைச்சின் கீழ் கொண்டுசெல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. DM
 


  Comments - 0

  • Mohamed Tuesday, 21 September 2010 05:52 PM

    அமெரிக்கா வரும். கவனம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .