2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பொன்சேகாவுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டக் கூட்டங்கள்

Super User   / 2010 செப்டெம்பர் 22 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரியும் இலங்கையில் ஜனநாயக நியமங்களை பாதுகாக்குமாறு கோரியும் வெளிநாடுகளில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டக் கூட்டங்களை நடத்தவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. சரத் பொன்சேகாவின் மகள் அப்சராவும் இக்கூட்டங்களில் பங்குபற்றவுள்ளார்.

முதலாவது கூட்டம் இத்தாலியின் மிலானோ நகரில் செப்டெம்பர் 26 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கூட்டம்  பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஒக்டோர் 2 ஆம் திகதியும் மூன்றாவது கூட்டம் இத்தாலியின் ரோம் நகரில் ஒக்டோபர் 3 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

ஜ.தே.முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ஜுன ரணதுங்க, அனோமா பொன்சேகா, டிரான்அலஸ் ஆகியோரும் இக்கூட்டங்களில் பங்குபற்றவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .