Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 24 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் ஏனைய மரக்கறிகளுக்கான விதைகளை இறக்குமதி செய்வதனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன தீர்மானித்துள்ளார்.
இந்த விதைகளை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் அரசாங்கத்திற்கு ஒரு பில்லியன் ரூபாய் செலவாகுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தேவையான விதைகளை 100 வீதத்தையும் உள்நாட்டிலேயே உற்பத்தியாக்குவதற்கான சிபாரிசுகளையும் விதைகளை இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய்வதற்கும் விவசாய அமைச்சின் பிரதிச் செயலாளர் ஜி.ஏ.எம்.எஸ்.அமித்தியகொட தலைமையிலான விசேட குழுவொன்றையும் அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன நியமித்துள்ளார்.
இலங்கையானது வருடாந்தம் 400 மில்லியன் ரூபாய் பெறுமதியான உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் ஏனைய மரக்கறிகளுக்கான விதைகளை இந்தியா, நெதர்லாந்து, தாய்லாந்து, பாகிஸ்தான், ஜேர்மன், ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதாக அமித்தியகொட கூறினார்.
விதைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களையும் விற்பனை செய்யும் நிலையங்களையும் களஞ்சியசாலைகளையும் மற்றும் இதற்கான ஏனைய நிறுவங்கள் தொடர்பிலும் இந்த விசேட குழுவானது விசாரணைகளை நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .