2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

அபிவிருத்தி, இடர் முகாமைத்துவ பணிகளில் இராணுவத்தினர்

Super User   / 2010 செப்டெம்பர் 24 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                                         (றிப்தி அலி)
 
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு கடமைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபடவுள்ளதாக இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு  தெரிவித்தார்.

சிவில் இராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கையின் கீழ் அபிவிருத்தித் திட்டங்கள், இடர் முகாமைத்துவ செயற்பாடுகள் போன்றவற்றில் ஈடுபடுவதற்காவே நாட்டின் பல பகுதிகளில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ள இராணுவத்தினர் பொலிஸாருக்கு உதவியாக செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் விசேட அதிரடிப் படையினர் தொடர்ந்து கடமையாற்றுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குருநாகல் ஹம்பாந்தோட்டை, புத்தளம், மொனராகலை போன்ற பல்வேறு பிரதேசங்களில் இராணுவனத்தினர் கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--