2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

மங்கள சமரவீரவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

Super User   / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று விசாரணை நடத்தினர். சுவரொட்டியொன்று அச்சிடப்பட்ட விவகாரம் குறித்தே இவ்விசாரணை நடைபெற்றது.

குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளித்த பின்னர் மங்கள சமரவீர இது தொடர்பாக கூறுகையில் ஒரு சுவரொட்டி தொடர்பாக 3 மணித்தியாலங்கள் விசாரிக்கப்பட்டமை இலங்கையில் ஜனநாயகத்தின் வீழ்ச்சியை காட்டுகிறது எனக் கூறினார்.

18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டத்திற்காக அச்சிடப்பட்ட சுவரொட்டியொன்று குறித்தே மங்கள சமரவீரவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--