Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நபீலா ஹுஸைன்)
பருவமழை காரணமாக ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் கடும் மழை பெய்து வெள்ள நிலைமை ஏற்படும் சாத்தியம் உள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
பருவக்காற்று அதன் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் பருவக்காற்று இடை மழை விரைவில் வரக்கூடும். இதனால் பிற்பகலிலும் மாலை வேளையிலும் நாட்டின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி டி.ஏ.ஜயசிங்க ஆரச்சி கூறினார்.
காற்று தணிந்த நிலைமையினால்தான் மழை பெய்கிறது. ஆனால் இது சுழல் காற்றாக மாறவில்லை. நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய இடங்களில் அதிக மழை பெய்யலாம்.
மேல் மாகாணத்தைப் பொறுத்தவரையில், இடி மின்னலுடன் மழை பெய்யும். சில பகுதிகளில் கடும் மழை பெய்யலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
மழை உள்நாட்டுப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால் மண்சரிவு அபாயம் ஏற்படலாம். அனர்த்தம் எதிர்ப்பார்க்கப்படும் இடங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். தேவையெனில் அவர்கள் வேறு இடங்களுக்கு அனுப்பப்படலாம் என தேசத்தை கட்டியெழுப்பும் ஆய்வு நிறுவன பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.பீ.ஜெ.பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதுவரையில் மண்சரவி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதுடன் அவ்விடத்திலிருந்து 25 - 30 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன என அவர் கூறினார். காலி, நுவரெலியா, கொத்மலை போன்ற பிரதேசங்களின் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கடும் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. வெள்ளம் காரணமாக புத்தளம் - மன்னார் வீதி மூடப்பட்டுள்ளது என அந்நிலையம் மேலும் குறிப்பிட்டது.
14 minute ago
41 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
41 minute ago
53 minute ago
1 hours ago