Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை , இந்திய மீனவர்கள் எல்லைக்களைத் தாண்டி மீன்பிடித்துவரும் நிலையில், அவர்களுக்கு இது தொடர்பாக கல்வித்திட்டமொன்றை இருநாடுகளின் கடற்படையினரும் மேற்கொள்ளவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் அதுல செனரத் டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளார்.
இலகுவாக மீன்பிடிப்பதற்காக மீனவர்கள் எல்லைகளைப் புறக்கணித்துவிட்டு அவற்றை மீறுகின்றனர். இதனால் அவர்களுக்கு விரிவான கல்வித்திட்டமொன்றை வழங்கவுள்ளோம் என அவர் கூறினார்.
இந்திய கடற்படைக் கப்பலொன்றில் இரு நாடுகளின் கடற்படையினருக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இவ்விவகாரம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
கண்காணிப்பு ரோந்து நடவடிக்கைகள் உட்பட பாக்கு நீரிணையின் பாதுகாப்பு குறித்தும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டது.
"போதைபொருள்கடத்தல், ஆட்கடத்தல் என்பவற்றை முன்னேற்றகரமான கண்காணிப்பு முறை மூலம் முடிவுக்கு கொண்டு வந்து, பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து நாம் கலந்துரையாடினோம்" என கடற்படைப் பேச்சாளர் மேலும் கூறினார்.
இலங்கையின் கடல் எல்லைக்கு வடக்கே இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எவ். கௌராயில் இருநாடுகளின் கடற்படையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். வருடத்திற்கு இரு தடவை இத்தகைய சந்திப்பை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. (DM)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago