2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் இருவர் பலி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியிலுள்ள மொடினா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் பலியான இருவரும் ஏனைய நான்கு பேருடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, குறித்த காரின் சாரதியால் காரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது போனதால் நீர்த்தாங்கியொன்றுடன் கார் மோதி விபத்துக்குள்ளானது.

வென்னப்புவைச் சேர்ந்த டிஸ்ன ஹெலென் சஞ்ஜீவனி (வயது 29), லுனுவிலுவைச் சேர்ந்த அஜித் றஞ்சன் சுரேஷ் பெர்னாண்டோ (வயது 34) ஆகியோரே இந்த விபத்தில் பலியானவர்கள் ஆவார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் அல்லது 4ஆம் திகதிகளில் இவர்கள் இருவரின் சடலங்களையும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை இத்தாலியுள்ள உறவினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுடன் பயணித்த ஏனையோர் ஆபத்தான நிலையிலிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.(DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--