2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நாடாளுமன்ற சபை இவ்வாரம் கூடவுள்ளது

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 03 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படவுள்ள நாடாளுமன்றச் சபைக்கான அங்கத்தவர்கள் தொடர்பான அறிவிப்பு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படவுள்ளது. 

பிரதமர் டி.எம்.ஜயரட்னவினால் முன்மொழியப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட ஐவர் இந்த நாடாளுமன்ற சபையில் உள்ளடங்குகின்றனர்.

ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சபையில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளடங்குவதுடன், மேலும் இருவரை பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .