2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

மின்னல் தாக்கி ஐவர் பலி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 04 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை, கம்பஹா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மின்னல் தாக்கி 5 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தேசிய இணைப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். 

நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வரும் நிலையில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பதுளைக்கும் ஹப்புத்தளைக்கும் இடையிலான வீதி மூடப்பட்டுள்ளதுடன், காலி மாவட்டத்தில் பல வீதிகள்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .