Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மெலனி பமுனுசிங்க)
ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக ஆசி வேண்டி கண்டி தலதா மாளிகையில் நாளை புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு விசேட பூஜையொன்று நடைபெறவுள்ளதாக கொட்டி நாகவிஹாரையின் பிரதம குருவான வண. மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.
சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலையாவதற்கும் அவரது உடல் உள ஆரோக்கியத்திற்காகவும் நாளை நடைபெறவுள்ள இந்த பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டு அவரை ஆசீர்வதிக்குமாறும் பௌத்த தேரர்களுக்கு இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சிறந்த இராணுவத் தலைவர் ஒருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தேவையாக இருந்தது. அதனால் தான் சரத் பொன்சேகா ஒரு இராணுவத் தளபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்றும் இந்நிலையில், சரத் பொன்சேகாவின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் அவரை மஹிந்த ராஜபக்ஷ சிறையில் அடைத்துள்ளார் எனவும் தேரர் தெரிவித்தார்.
சரத் பொன்சேகா பல தடவைகள் காயமடைந்துள்ளபோதிலும், யுத்தத்தை முடிக்காமல் இராணுவத்திலிருந்து வெளியேற அவர் விரும்பவில்லை. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக சரத் பொன்சேகாவை மஹிந்த ராஜபக்ஷ புகழ்ந்தார். ஜனாதிபதி எங்களது விடுதலைக்காக தலைவரைத் தெரிவு செய்தார். இன்று எமக்கு விடுதலை கிடைத்துள்ளது. ஆனால், சரத் பொன்சேகா சிறையில் உள்ளார் எனவும் அவர் கவலை வெளியிட்டார்.
விநாயகமூர்த்தி முரளிதரன், குமரன் பத்மநாதன் ஆகியோர் தண்டிக்கப்படவில்லை. மன்னிப்புக் கேட்கும்படி அவர்களை கேட்கவில்லை. எத்தனையோ கொலைகளுடன் தொடர்புபட்டிருந்தவர்கள் வசதியாக வாழ்கின்றனர். ஆனால், இராணுவத் தளபதியை சிறையில் அடைத்துள்ளார் எனவும் தேரர் தெரிவித்தார்.
40 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago