2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

சிசுவை கொன்ற தாய் கைது

Super User   / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(திலக் நிமலசூரிய)

பிறந்து சில மணித்தியாலங்களேயான சிசுவொன்றை குத்தி கொலை செய்து சடலத்தை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்துவைத்த பெண்ணொருவரை சப்புகஸ்கந்த பொலஸார் இன்று கைது செய்துள்ளனர்.

வயிற்றுவலியெனக் கூறி கழிவறைக்குச் சென்ற அப்பெண், அங்கு குழந்தையை பெற்றதாக கூறப்படுகிறது. அப்பெண்ணின் கணவர் குளிர்சாதனப் பெட்டியில் இரத்தக்கறையைக் கண்டு அதை திறந்தபோது, அங்கு குறித்த பெண்சிசுவைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

37 வயதான இப்பெண், இரு பிள்ளைகளின் தாய் ஆவார். அவரின் கணவர் முச்சக்கர வாகன சாரதியாக பணியாற்றுகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .