Super User / 2010 ஒக்டோபர் 07 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
குவைத்தில் வீட்டுப்பணியாளர்களாக தொழில்புரிவோர் அதிகமாக சுரண்டப்படுவதாகவும் மோசமான எஜமானர்களிடமிருந்து அவர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பே கிடைக்கிறது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
வீட்டுப்பணியாளர்களை உடல் ரீதியிலும் பாலியல் ரீதியிலும் துஷ்பிரயோகம் செய்யும் எஜமானர்களிடத்திலிருந்தும் சம்பளங்களை வழங்காதிருத்தல், நீண்ட நேரமாக வேலை செய்ய நிர்ப்பந்தித்தல் விடுமுறை போதிய உணவு என்பவன்றை வழங்காதிருத்தல் ஆகியனவற்றின் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளை மீறுவோரிடத்திலிருந்தும் குறைந்தபட்ச பாதுகாப்பே கிடைப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
மோசமான எஜமானர்களிடமிருந்து தப்பிச் செல்ல முற்படுபவர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவதாகவும் எஜமானர்களின் அனுமதியின்றி தொழிலை மாற்றிக்கொள்ள முடியாதிருப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
54 minute ago
5 hours ago
9 hours ago
31 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
5 hours ago
9 hours ago
31 Oct 2025