2021 மார்ச் 03, புதன்கிழமை

கட்டில், மின்விசிறி, உடற்பயிற்சி இயந்திரம் வேண்டும்: பொன்சேகா

Super User   / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தனக்கு மின்விசிறி, உடற்பயிற்சி இயந்திரம் மற்றும் கட்டில் ஆகியவை வேண்டுமென சிறைச்சாலைகள் ஆணையாளரிடம் கோரியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி. சில்வாவை வெலிக்கடையிலுள்ள அவரின் அலுவலகத்தில் வியாழனன்று சந்தித்தபோதே சரத் பொன்சேகா இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
 

இதற்கு பதிலளித்த சிறைச்சாலை ஆணையாளர், இக்கோரிக்கையை தாமதமின்றி நீதியமைச்சுக்கு அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .