2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

வடக்கு, கிழக்கிற்கு தப்பியோடிய சந்தேக நபர்கள் கைது

Super User   / 2010 ஒக்டோபர் 08 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேடப்பட்டு பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு தப்பியோடிய பல சந்தேக நபர்களை கொழும்பு மோசடி புலனாய்வு பிரிவின்  விசேட குழு கைது செய்துள்ளது.

பொலிஸாரிடம் பிடிபடாமல் தப்பியோடிய சந்தேக நபர்களை கொழும்பிலிருந்து சென்ற விசேட குழு கைது செய்துள்ளது. இவர்களில் இருவர் 300,000 ரூபாய் பெறுமதியான துணி மோசடி மற்றும் 230,000 ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் மோசடியில் ஈடுபட்ட  சந்தேக நபர்கள் ஆவார்.

குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .