2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

வங்கிக் கொள்ளை தொடர்பில் இதுவரை கைதுகள் இல்லை

Super User   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( காந்த்ய சேனாநாயக்க)

பேலியகொடையில் தனியார் வங்கியொன்றின் 7 கோடி ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி, டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு உதவும் தகவல்களை வழங்குபவர்களுககு 25 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் திணைக்களம் ஏற்கெனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கொள்ளை தொடர்பான தகவல்கள் இருப்பின் ஆகிய விசேட தொலைபேசி இலக்கங்கள் மூலம் பொலிஸாருக்கு தெரிவிக்கலாம் என – 011-2662311, 011-2662323, 011-2685151 அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X