2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

ஜோர்தானில் இலங்கை தொழிலாளர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

Super User   / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காந்த்ய சேனநாயக்க)

ஜோர்தான் ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் இலங்கையர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் வாகனத்தின் மீது கற்களை வீசி, பொலிஸ் வாகனத்தை சேதப்படுத்தியதுடன் பொலிஸாரும் காயத்திற்குள்ளானதை அடுத்து ஜோர்தான் பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டனர்.

இலங்கையைச் சேர்ந்த மேற்பார்வையாளரை நீக்கும் படியும் அத்துடன் தொழிலாளிகளுக்கு தங்குமிட வசதி வழங்கும் படியும் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக இடம்பெற்ற பல கூட்டங்களின் பின்னர் தொழிற்சாலை நிர்வாகத்தினர் இக்கோரிக்கையினை ஏற்றுக் கொண்டனர்.

இவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொண்டதான தகவலை உயர் அதிகாரி ஒருவர் அறிவிக்க முற்பட்ட போதே பொலிஸார் மீது கல் வீசப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொலிஸார் கண்ணீர் புகையால் தாக்கியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

அத்துடன் இலங்கை தூதரக அதிகாரிகளும் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் கலந்துரையாட முற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் மேற்பார்வையாளருக்கும் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து மேற்பார்வையாளரை இடமாற்றுமாறு ஊழியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட போதும், பின்னர் அது அவரை பணியிலிருந்து நீக்குமாறு ஊழியர்கள் கோரினர். இதனாலேயே இப்பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .