2025 ஜூலை 03, வியாழக்கிழமை

வெள்ளைக்கொடி வழக்கு: குறிப்புப் புத்தகத்தின் பக்கங்கள் வித்தியாசமாக இருப்பதாக தெரிவிப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(பாரூக் தாஜுடீன்)

வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பிலான ட்ரையல் அட் பார் விசாரணையின் போது சாட்சியமளித்த சன்டே லீடர் ஆசிரியர் பெட்ரிகா ஜென்ஸின் குறிப்புப் புத்தகத்தில் சரத் பொன்சேகாவின் அறிக்கை தொடர்பான பக்கங்கள் ஏனைய பக்கங்களை விட நிறத்திலும் நிறையிலும் வித்தியாசமாக இருப்பதை நீதிபதிகள் இன்று அவதானித்தனர்.

பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி நளின் லடுவாஹெட்டி, நீதிபதிகள் தீபாலி விஜேசுந்தர, டபிள்யூ.எம்.பி.பி. வராவேவ எம்.இஸட். ரம்ஸீன் ஆகியோரிடம் இதை சுட்டிக்காட்டினார்.

இதேவேளை குறுக்கு விசாரணையின்போது தான் செய்தி ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் எதுவும் இல்லையெனவும், விவரண ஆசிரியராக முன்னர் பணியாற்றியதாகவும்  பிரெட்ரிகா ஜேன்ஸ் ஒப்புக்கொண்டார்.

இவ்விசாரணை நாளை புதன்கிழமைக்கு  ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன்இ  நலன்விரும்பி ஒருவரால்சரத் பொன்சேகாவுக்காக வழங்கப்பட்ட தொலைக்காட்சி பொட்டியை பயன்படுத்த அனுமதிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .