2021 மார்ச் 08, திங்கட்கிழமை

வடபகுதி இளைஞர்களின் எதிர்காலத்திற்கு ஆபத்து

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா)

ஜே.வி.பி.யின் இளைஞர் அமைப்பான சோஸலிச இளைஞர் சங்கம், தம்மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தமது உரிமைகளை வெற்றி கொள்வதில் ஜனநாயக வழிகள் மீதான தமது நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளதாக இன்று கூறியது.

இவ்வகையில் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள திரைப்பட விழா தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டதாகும்.

வடக்கிலுள்ள இளைஞர்கள், ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இழக்கவும் தமது உரிமைகளை பெற வேறு வழிகளை நாடவும் நிர்ப்பந்திக்கப்படுவதால், இளைஞர்களின் எதிர்காலம் பயங்கரமாக தெரிகிறது என சோஸலிச இளைஞர் சங்க செயற்பாட்டாளரும் மேல்மாகாண சபையின் ஜே.வி.பி. உறுப்பினருமான வருண தீபத ராஜபக்ஷ இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.

கடந்த சில நாட்களாக இளைஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும் செவ்வாய்க்கிழமையும் இளைஞர்கள் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த குறித்த நிகழ்வில் திரைப்பட விழா தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது வாகனங்களில் வந்தவர்கள் தாக்குதலை மேற்கொண்டனர்.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் சிங்களத்தில் பேசியதாகவும் இளைஞர்களை பயமுறுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய ராஜபக்ஷ, இளைஞர்கள் தமது இழந்துபோன கலாசாரத்தை மீட்டெடுக்கவும், தமது அரசியல் கருத்தை வெளிப்படுத்தவும், வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளவும் உள்ள உரிமை அடக்கியொடுக்கப்படுகின்றது என்றார். முன்பு இந்த உரிமைகள் எல்.ரி.ரி.ஈ.யினால் மறுக்கப்பட்டன. இப்போது அரசாங்கத்துடன் தொடர்புடைய குழுக்களால் மறுக்கப்படுகின்றன என்று மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .