Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் விடுதலை முன்னணியின் தூண்டுதலின் காரணமாகவே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் செயற்பட்டதாக பிரதி உயர் கல்வி அமைச்சர் நந்திமித்திர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
உயர் கல்வி அமைச்சில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்தே, அவர் இதனைக் கூறினார்.
மாணவர்களால் அமைச்சு தாக்கப்பட்டது இதுவே முதல்த் தடவையென்பதுடன், இந்த சம்பவத்திற்கு பின்னால் எவருள்ளனர் என்பது தமக்கு தெரியுமெனவும் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு அவர் கூறினார்.
பல்கலைக்கழகங்களுக்குள் சிறியதொரு அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி முயற்சிப்பதுடன், தமது அரசியல் இலாபங்களுக்காக பல்கலைக்கழக மாணவர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாகவும் நந்திமித்திர ஏக்கநாயக்க தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியுடன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு நீண்டகால தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பிலுள்ள பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான எந்தவித அதிகாரமும் தமக்கு இல்லையெனத் தெரிவித்த அவர், அமைச்சர், பிரதி அமைச்சர் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரால் எவ்வாறு இவர்களை விடுதலை செய்ய முடியுமெனவும் கேள்வியெழுப்பினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
53 minute ago
02 Jul 2025