2025 ஜூலை 03, வியாழக்கிழமை

இந்தியாவுடன் விசேட உறவு; சீனாவுடன் பொருளாதார கூட்டுறவு: அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

Super User   / 2010 ஒக்டோபர் 17 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவுடன் விசேட உறவைத் தொடரும் அதேவேளை, சீனாவுடனான பொருளாதாரக் கூட்டுறவை இலங்கை மேம்படுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் புதுடில்லியில் நேற்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக எந்த நாடும் இலங்கையை பயன்படுத்த அனுமதிப்பது குறித்த கேள்விக்கு இடமில்லை எனவும் டைம்ஸ் ஒவ் இந்தியா, நாளிதழுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, லக்சர் ஈ தொய்பா அமைப்பு இலங்கையை தனது நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமைக்கான ஆதாரம் எதுவும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார்.

 புனே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டுவரும் சந்தேக நபர் ஒருவர் லக்சர் ஈ தொய்பா அமைப்பின் அங்கத்தவர்கள் இலங்கையில் பயிற்சிபெற்றதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறுகையில், 'இவ்விடயம் எமது கவனத்திற்கு வந்தது. எமது பாதுகாப்புத் தரப்பினால் இவ்விடயம் ஆராயப்பட்டது. மேற்படி கூற்றை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரம் எதையும் நாம் கண்டறியவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அத்தகைய நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக இரு நாடுகளும் புலனாய்வுத் தகவல்களை பரிமாறும் பொறிமுறையொன்றை கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • G.Pramanathan Sunday, 17 October 2010 06:46 PM

    பாம்புக்குத் தலை மீனுக்கு வால்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .