Freelancer / 2025 நவம்பர் 19 , மு.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களைத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள செவ்வந்தி உட்பட ஏனையவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை வெகுவிரைவில் எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) அன்று இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொலிஸ் திணைக்களம் தற்போது சுயாதீனமாக செயற்படுகிறது .கடந்த காலங்களில் பொலிஸ் திணைக்களத்தில் எவ்வாறான அரசியல் தலையீடுகள் காணப்பட்டன என்பதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள். கடந்த அரசாங்கத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்ட 182 பேரில் 180 பேர் அரசியல் பரிந்துரைகளுடன் நியமிக்கப்பட்டார்கள் என்று முன்னாள் பொலிஸ்மா அதிபர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது எதிர்க்கட்சியினர் அந்த செயற்பாடுகளை மலினப்படுத்தும் வகையில் செயற்படுகிறார்கள். கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய செவ்வந்தியை கைது செய்த பொலிஸ் அதிகாரி ரொஹான் ஒலுகல தொடர்பிலும் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களைத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள செவ்வந்தி உட்பட ஏனையவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் . இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் பாதாள குழு உறுப்பினரான கெஹல்பத்தரே பத்மே உள்ளிட்ட அவரது தரப்பினர் வெளிப்படுத்திய தகவல்களுக்கு அமையப் பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 80 பேரைக் கைது செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இயன்றளவான காலப்பகுதியில் 20 மெற்றிக்தொன் வரையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago