2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கர்தினாலாகத் தெரிவு

Super User   / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பேராயர் அதி.வண மல்கம் ரஞ்சித் ஆண்டகை கர்தினாலாக பாப்பரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பரினால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி 24 புதிய கர்தினால்கள் பாப்பரசரினால் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் ஆசியாவைச் சேர்ந்த ஒரேயொரு கர்தினாலாக பேராயர் மல்கம் ரஞ்சித் விளங்குகிறார்.

இந்நியமனம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேராயர் மல்கம்  ரஞ்சித் ஆண்டகைக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கர்தினாலாக நியமிக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும். இலங்கையைச் சேர்ந்த வண.தோமஸ் குரே ஏற்கெனவே கர்தினாலாக அருட்பணியாற்றியுள்ளார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .