2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கடன் செலுத்த பாதுகாப்பு துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு - அரசாங்கம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யுத்த காலத்தின் போது வெளிநாடுகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களை செலுத்துவதற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களுக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்தது.

இருப்பினும் கடந்த வருடத்தைவிட இவ்வருடம் பாதுகாப்பு செலவினத்துக்கான நிதியொதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

"கடந்த வருடம் பாதுகாப்பு செலவினங்களுக்காக 260 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தப் போதிலும் இவ்வருடம் அது 210 பில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

யுத்தகாலத்தின் போது பல்வேறு நாடுகளிடமிருந்து கடன் அடிப்படையில் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதுடன் மற்றும் சில நாடுகளிடமிருந்து ஆயுதக் கொள்வனவுக்காகவென்று கடன்களும் பெறப்பட்டன.

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் குறித்த கடன்களை செலுத்தும் கடப்பாட்டில் அரசாங்கம் உள்ளது. எனவே இம்முறை வரவு செலவுத்திட்டதில் பாதுகாப்பு செலவினங்களுக்காக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது' என்றும் அமைச்சர் கூறினார். (M.M)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .