2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

ஊடகவியலாளர் மீது தாக்குதல்; பொலிஸ்மா அதிபரிடம் அறிக்கை கோரினார் ஜனாதிபதி

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை செய்தி சேகரிப்புக்காகச் சென்ற ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் கொழும்பில் நடைபெற்ற அனைத்துப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தை செய்தி சேகரிப்புக்காக சென்ற ஊடகவியிலாளர்கள் ஐவர் பொலிஸாரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (M.M)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .