Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 21 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தளாய் சீனித் தொழிற்சாலை, எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலை மற்றும் லங்கா பீங்கான் தொழிற்சாலை ஆகியவற்றை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
அந்தவகையில், கந்தளாய் சீனித் தொழிற்சாலை மற்றும் எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலை ஆகியவற்றை அரசாங்கமும் தனியாரும் இணைந்து செயற்படும் நிறுவனங்களாகச் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மேற்படி சீனித் தொழிற்சாலையினை மீளக் கட்டியெழுப்புவதற்காக வெளிநாட்டு முதலீட்டினைப் பெற்றுக்கொள்வதற்காக தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து கேள்வி கோரப்படவுள்ளது.
இதேவேளை, எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலை மற்றும் லங்கா பீங்கான் தொழிற்சாலைகளுக்கு சொந்தமான எரகம, உஸ்வௌ, மஹியங்கனை மற்றும் எலயாபத்துவ போன்ற பகுதிகளிலுள்ள தொழிற்சாலைகளை அபிவிருத்திக்கு உட்படுத்துவதற்காக தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து கேள்வி கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (M.M)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago