Super User / 2010 ஒக்டோபர் 21 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக் கடற்படையினர் தமது கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களை முன்கூட்டி திட்டமிட்ட வகையில் தாக்குவதில்லை என இந்திய கடற்படையின் தென் மண்டல தளபதி வைஸ் அட்மிரல் கே.என். சுசில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது குறித்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"மீனவர்களை முன்கூட்டி திட்டமிட்ட தாக்குவதை இலங்கைக் கடற்படையினர் பின்பற்றவில்லை. கடலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடற்படையினருக்கு அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணியின்படி, சுடுவதைத் தவிர வேறு வழியில்லை.
இலங்கைக் கடற்படையினர் வேண்டுமென்றே இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஒரு சம்பவம்கூட இருப்பதாக நான் கருதவில்லை. அப்படியான சம்பவங்கள் இருந்தால் முழுமையான விசாரணை மூலம் அவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும்' என வைஸ் அட்மிரல் கே.என். சுசில் கூறியுள்ளார்.
16 minute ago
23 minute ago
24 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
24 minute ago
40 minute ago