Super User / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நபீலா ஹுசைன்)
போரினால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி மறுக்கப்பட்டதாக தொழிற்சங்க சம்மேளனம் இன்று அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் உரிய காலத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற காரணத்தினால் 40 இடம்பெயர்ந்த அரச ஊழியருக்கு அக்ரஹா காப்புறுதி மறுக்கப்பட்டுள்ளது. மூன்று மாதத்திற்குள் விண்ணப்பிக்காத காரணத்தால் இவர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது.
போர் முடிந்த பின் ஒன்பது மாதங்கள் முகாமில் வைக்கப்பட்டிருந்த இவர்களால் எப்படி உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்க முடியும்? என தொழிற்ச் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.
இவர்கள் வன்னியிலிருந்து வந்தவர்களே ஆவர். யுத்தம் முடிந்த பின்பும் மருத்துவ சான்றிதழ் பெற முடியவில்லை. இறந்து போனவர்களின் எண்ணிக்கையும் கணக்கெடுக்கப்படவில்லை. இந்த 40 பேர் மட்டுமல்ல யுத்தத்தால் அகப்பட்ட சகல அரச ஊழியருக்கும் அக்ரஹார காப்புறுதி பணம் வழங்கப்பட வேண்டும் என்றார் ஜோசப் ஸ்ராலின்.
இது தொடர்பாக பொறுப்பு வாய்ந்த சகலருக்கும் அறிவித்துள்ளதாகவும் இந்த பிரச்சினைக்கு சாதகமான தீர்வு கிடைக்குமென நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026